வடகோவனூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

கூத்தாநல்லூர் அருகே வடகோவனூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-03-15 18:45 GMT

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வடகோவனூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பிரிவு சாலை

கூத்தாநல்லூர் அருகே கோரையாறு பாலம் எதிரில், வடகோவனூர் செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலையை வடகோவனூர், தென்கோவனூர், பாண்டுகுடி, மரக்கடை, திருராமேஸ்வரம், வாக்கோட்டை, கோரையாறு, குடிதாங்கிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், இந்த சாலையில் பள்ளி வாகனங்கள், லாரி, டிராக்டர், கார், வேன், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த பிரிவு சாலை அமைந்துள்ள இடத்தில் பஸ் நிறுத்தமும் உள்ளது.

அடிக்கடி விபத்து

இந்த கோரையாறு சாலை திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் செல்வதற்கு முக்கிய வழித்தடம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பிரிவு சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன.

இந்த இடத்தில் எதிர் எதிரே வரும் வாகனங்கள் எளிதில் தெரிவதில்லை. இதனால், வடகோவனூர் பிரிவு சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடகோவனூர் பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்