சேதம் அடைந்த இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?

சேதம் அடைந்த இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-06-14 19:15 GMT

திருமருகல் அருகே நடுக்கடை-தண்டாளம் இடையே உள்ள இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இணைப்பு சாலை

நாகை மாவட்டம் திருமருகல் அருகே கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை-தண்டாளம் இடையே இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலையை கட்டுமாவடி, தண்டாளம், ஆலத்தூர் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சீரமைக்க வேண்டும்

குண்டும், குழியுமான சாலையில் நடந்து செல்வதற்கே சிரமமாக இருப்பதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். இது குறித்து திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் சாலை சீரமைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

எனவே சேதம் அடைந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்