ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா?

கோட்டூர் அருகே சித்தமல்லியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-06-08 18:30 GMT

கோட்டூர்:

ஆரம்ப சுகாதார நிலையம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே உள்ள சித்தமல்லி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு கடந்த 1973-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் மகப்பேறு, மருந்தகம், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுகளத்தூர், சித்தமல்லி, மண்ணுக்கும் உண்டான், தேவதானம், திருவிடைமருதூர், பெருகவாழ்ந்தான், பாலையூர், கெழுவத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு மருத்துவ பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேம்படுத்தப்படுமா?

மேலும், இந்த ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் வெயிலாலும், மழையாலும் பழுதடைந்துள்ளன. இதன் சுற்றுச்சுவர் மற்றும் முன்புற கதவு ஆகியவை கஜா புயலின் போது இடிந்து விழுந்து விட்டன. ஆனால், இன்றுவரை சீரமைக்கப்படவில்லை. மேலும், அவசரகால மேல் சிகிச்சைக்கு இங்கிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. ஆகவே, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு புதிய கட்டிடங்கள் கட்டவும், 35 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுதொடர்பாக நொச்சியூர் ஊராட்சிமன்ற தலைவர் இனியசேகரன் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனுவும் அனுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்