குண்டும்,குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

ஆதினங்குடி-கணபதிபுரம் இடையே குண்டும்,குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-02 18:45 GMT

திட்டச்சேரி:

ஆதினங்குடி-கணபதிபுரம் இடையே குண்டும்,குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

5 கிலோ மீட்டர் தூரம் கொண்டது

திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆதினங்குடியிலிருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கொண்டது.

இந்த சாலையை ஆதினங்குடி, பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடும் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர பயன்படுத்துகின்றனர்.

குண்டும்,குழியுமான சாலை

மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்ல இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றன.

விபத்துகளில் சிக்குகின்றனர்

இதுகுறித்து தென்பிடாகை சுரேஷ் கூறுகையில்:- கணபதிபுரம்-ஆதினங்குடி இடையே சாலை கடந்த ஒரு ஆண்டு காலமாக சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் கூட தவறிந்து விழுந்து அடிபடுகின்றனர்.

நடவடிக்கை

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கையில் விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்