குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

நாகூர் புதிய கடைத்தெருவில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-10-15 18:45 GMT

நாகூர்:

நாகூர் புதிய கடைத்தெருவில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவிற்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.பொதுமக்கள்அதிக அளவில் பயன்படுத்தும் முக்கிய சாலைகளாக நாகூர் புதிய கடைத்தெரு சாலை இருந்து வருகிறது. இந்த சாலை கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைக்கின்றனர்.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாகூா் பெரிய கடைத்தெருவில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிபார்த்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்