போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தவர் சிறையில் அடைப்பா?ராமநாதபுரம் சிறை முன்பு குடும்பத்தினர் போராட்டம்

போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தவரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய குடும்பத்தினர் ராமநாதபுரம் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-23 17:02 GMT

போலீசார் தாக்கியதில் காயம் அடைந்தவரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய குடும்பத்தினர் ராமநாதபுரம் சிறை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் கோர்ட்டு ஊழியர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேந்தோணி பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. மாவட்ட கோர்ட்டில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து கடந்த மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இவருடைய மகன் சேதுபதி(வயது 38). இவருக்கும் அவரது நண்பர் சரவணக்குமார் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் சேதுபதி மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரை பரமக்குடி போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கைதியாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

போராட்டம்

சிகிச்சை முடியாத நிலையில் அவரை மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்துவிட்டதாக கூறி அவரது தாய் பானுமதியும், குடும்பத்தினரும் ராமநாதபுரம் சிறைச்சாலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தனது மகனின் உடல்நிலை சரியாகும்வரை சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவனின் உடலுக்கும் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் போலீசார்தான் பொறுப்பு என்றும் சிறைச்சாலை முன்பு கோஷமிட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்