முல்லையம்பட்டினம்-கோனையாம்பட்டினம் சாலை சீரமைக்கப்படுமா?

முல்லையம்பட்டினம்-கோனையாம்பட்டினம் சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-03 18:45 GMT

குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் முல்லையம்பட்டினம்-கோனையாம்பட்டினம் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குண்டும், குழியுமான சாலை

திருவெண்காடு அருகே நெப்பத்தூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட முல்லையாம்பட்டினம் பகுதியிலிருந்து கோனையாம்பட்டினம் கிராமத்திற்கு செல்ல இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி தான் திருமுல்லைவாசல், திருநகரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து கடலோர கிராம மக்கள் கீழ மூவர்கரை, மேல மூவர் கரை, பெருந்தோட்டம், நாயக்கர் குப்பம், தென்னாம்பட்டினம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல ஏதுவாக உள்ளது.

இதனால் பல கிலோ மீட்டர் கடந்து திருவெண்காடு வழியாக சுற்றி செல்வது தவிர்க்கப்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை ஊராட்சி ஒன்றிய சாலையாக இருந்தது. அப்போது சாலை அடிக்கடி பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றப்பட்டு விட்டது. பின்னர் இந்த சாலையில் இதுவரை எந்த பராமரிப்பு பணிகளும் நடக்கவில்லை. தற்போது இந்த சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

சீரமைக்க வேண்டும்

இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையின் இரண்டு பக்கமும் கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கும் முல்லையம்பட்டினம்-கோனையாம்பட்டினம் சாைலயை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் அவதி

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், தற்போது இந்த சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் சென்ற ஒரு வருடத்தில் இந்த சாலையில் புதுப்பிக்கும் பணிகள் செய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தப்பட்ட புதிய தார் சாலையாக அமைக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்