காட்சி பொருளான உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா?

திருமருகல் அருகே காட்சி பொருளான உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-07-10 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் அருகே காட்சி பொருளான உயர் கோபுர மின்விளக்கு ஒளிருமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

உயர்கோபுர மின்விளக்கு

திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கடைத்தெருவில் நெய்குப்பை, எரவாஞ்சேரி, நத்தம், திருமருகல் உள்ளிட்ட நான்கு சாலைகளை இணைக்கும் இடத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைந்துள்ளது. எரவாஞ்சேரி, துறையூர், நெய்குப்பை, மருங்கூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அதிகம் மருங்கூர் கடைத்தெருவிற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடைத்தெருவின் மையப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த பகுதி இரவு நேரங்களில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி சமூக விரோதிகள் கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த பகுதி பொதுமக்கள் உள்ளனர்.

விபத்துகளில் சிக்குகின்றனர்

மேலும் இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கி விடுகின்றனர். இந்த உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேற்கொண்டு இடத்தில் காட்சிப்பொருளாக உள்ள உயர் கோபுர மின் விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்