தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா?
திருமருகல் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி தேவன்குடி மேலத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு திருமருகலில் இருந்து மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவன்குடி மேலத்தெருவில் மின்கம்பிகள் தாழ்வான செல்கின்றன.
தீவிபத்து
மேலும் மின்கம்பிகள் குடியிருப்புகளை உரசி செல்கிறது.இதனால் காற்று வேகமாக வீசும் நேரங்களில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு பராமரிப்பு பணிகளை கூட செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.