சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
திருமருகல் அருகே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கை ஊராட்சி வாளாமங்கலம் தெற்கு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.தெற்கு தெருவில் இருந்து வாளாமங்கலம் பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஜல்லிக்கற்களால் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.