சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா?

அரிச்சந்திரபுரத்தில் சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2023-05-21 18:45 GMT

கூத்தாநல்லூர்:

அரிச்சந்திரபுரத்தில் சேதமடைந்த பயணிகள் நிழலகம் சீரமைக்கப்படுமா? என்று பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

பயணிகள் நிழலகம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள அரிச்சந்திரபுரம் கடைவீதி சாலையோரத்தில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது.

இந்த பயணிகள் நிழலகம் கடைவீதி சாலையையொட்டி உள்ளதாலும், திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர், மாவூர், திருத்துறைப்பூண்டி, எட்டுக்குடி, விக்ரபாண்டியம், சேந்தங்குடி, திருக்கொள்ளிக்காடு, கொரடாச்சேரி, கும்பகோணம் போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய வழித்தடம் என்பதாலும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர், பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ -மாணவிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

சிமெண்டு காரைகள் பெயர்ந்து...

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பயணிகள் நிழலகம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் மேற்கூரையில் மேல் பகுதியிலும், உள் பகுதியிலும் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்து உள்ளது. இதனால், விரிசல்கள் ஏற்பட்டு அடுத்தடுத்து மேற்கூரை முழுவதும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.

இதனால் இந்த பயணிகள் நிழலகத்தை பொதுமக்கள் அச்சத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சேதமடைந்த கட்டிடத்தில் மழை காலங்களில் மழை தண்ணீர் உள்ளே கசிந்து பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்