போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிமெண்டு சிலாப் அகற்றப்படுமா?

மணல்மேடு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சிமெண்டு சிலாப் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-05-18 19:00 GMT

மணல்மேடு:

மணல்மேடு அருகே அகரமணல்மேடு மெயின் ரோட்டில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் சார்பில், குடிநீர் எடுத்து செல்லப்படும் குழாய்க்கு மேல் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வு தொட்டியை மூட சிமெண்டு சிலாப் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிமெண்டு சிலாப் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லக்கூடிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு ேநரங்களில் சிலர் அந்த சிலாப் மீது மோதி கீழே விழுந்து விடுகின்றனர். ஆகவே, இந்த சிமெண்டு சிலாப்பை அகற்றி விட்டு போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்