பாலம் சீரமைக்கப்படுமா?
தரங்கம்பாடி அருகே வடகரையில் பாலம் சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இனையாளூர் வடகரையும் அன்னவாசல் வாடாகுடியை இணைக்கும் மஞ்சளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமானது வாகனப்போக்குவரத்திற்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இவ்வழியில் உள்ள அன்ன வாசல், முத்தூர், நரசிங்கம் நத்தம், கடக்கம், கிளியனூர் ஆகிய கிராம மக்கள் இந்த பாலத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாலம் சேதமடைந்து உள்ளதால் பாலத்தை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.