கண்காணிப்பு கேமரா செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

கண்காணிப்பு கேமரா செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-18 20:20 GMT

திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 கண்காணிப்பு கேமராக்கள்

திருச்சிற்றம்பலம் கடைவீதியில் நடைபெறும் குற்ற செயல்களை கண்டுபிடிப்பதற்கு வசதியாக திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தம் அருகில் ஒரே இடத்தில் 3 கண்காணிப்பு கேமராக்கள் போலீஸ்துறையினரால் சில வருடங்களுக்கு முன்பு பொருத்தப்பட்டன. கேமரா பொருத்தப்பட்டு சில மாதங்களிலேயே அது செயல்படவில்லை. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் அண்மைக்காலமாக குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிக அளவில் நடைபெற தொடங்கியுள்ளது. குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க திருச்சிற்றம்பலம் போலீசாருக்கு போதிய அளவு முகாந்திரம் இல்லாததால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

குற்றச்செயல்களை தடுக்க வேண்டும்

இதனால் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் குற்றச்செயல்கள் தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை முழுமையாக தடுப்பதற்கு வசதியாக திருச்சிற்றம்பலம் பஸ் நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை உடனடியாக சீரமைத்து தருவதுடன், திருச்சிற்றம்பலம் கடைவீதியில் உள்ள முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றச்செயல்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என திருச்சிற்றம்பலம் பகுதி சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்