தொடர்் திருட்டுகளை தடுக்க திற்பரப்பு அருவிப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

திற்பரப்பு அருவிப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதை தடுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-12-27 18:35 GMT

குலசேகரம்:

திற்பரப்பு அருவிப்பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதை தடுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திற்பரப்பு அருவி

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானது திற்பரப்பு அருவி ஆகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அதிலும் வெளி மாவட்டங்களில் இருந்த கார் மற்றும் வேன்களில் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வாகனத்தை மூடிவிட்டு சென்றதும், கார் கண்ணாடியை உடைத்து பொருட்கள் திருடப்படுகிறது.

மேலும் திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும் நடந்து வருகிறது. கடந்த 24-ந் தேதி நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தில் 5 பேர் திற்பரப்பு அருவிக்கு வந்தனர்.

3¼ பவுன் திருட்டு

அவர்களில் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் உடைமைகளை கொடுத்து விட்டு மற்ற 4 பேரும் படகு சவாரி செய்ய சென்றனர்.

அப்போது அந்த பெண் கழுத்தில் அணிந்து இருந்த 21 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் பறிக்க முயன்றாா்். அதில் 27 கிராம் டாலர் மட்டும் அதாவது 3¼ பவுனுக்கு மேல் மர்ம நபர் வசம் சென்றது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. எனவே திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறை பகுதிகளில் போலீசார் ே்ராந்து சுற்றி வந்து கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் அங்கு தேவையான கண்காணிப்பு கேமராக்களையும் அமைக்க வேண்டும். புறக்காவல் நிலையம் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது. அது எப்போதும் திறந்து இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திற்பரப்பு பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினால் தொடர் திருட்டை தடுக்க முடியும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கை ஆகும்.

திற்பரப்பு அருவி மற்றும் படகுத்துறை ஆகிய இருபகுதிகளும் கடையல் மற்றும் அருமனை பேரூராட்சிக்குள் வருகின்றன. மேலும் இப்பகுதிகள் குலசேகரம், கடையல் மற்றும் அருமனை போலீஸ் நிலைய எல்கைகளில் உள்ளன.

எனவே திற்பரப்பு அருவி பகுதியில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்