கரூர் ரெத்தினம் சாலை சீர் செய்யப்படுமா?

எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் ரெத்தினம் சாலை சீர் செய்யப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-29 20:11 GMT

சாலையில் பள்ளம்

கரூர் சர்ச் கார்னரில் இருந்து வெங்கமேடு செல்லும் சாலை பிரிவில் இருந்து ெரத்தினம் சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை வழியாக கரூர் ெரயில்நிலையம், பூ மார்க்கெட், தனியார் வங்கி குடியிருப்புகளுக்கு செல்பவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் நகரில் உள்ள பல்வேறு டெக்ஸ்டைல் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ெரயில் மூலம் வருகை புரிந்து, பின் இந்த சாலை வழியாகவே நகரில் உள்ள அனைத்து டெக்ஸ்டைல் நிறுவனங்களுக்கும் பணிக்கு சென்று வருகின்றனர்.

இதனால் இந்த சாலை எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும். மேலும் இந்த சாலையில் 4 திரையரங்குகளும் உள்ளன. இதனால் எப்போதும் அதிக அளவிலான வாகனங்கள் இச்சாலையை கடந்து செல்லும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கரூர் நகரில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் சாலை சேறும், சகதியுமாக மாறி பள்ளம் ஏற்பட்டது.

கோரிக்கை

இதனால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி சாலை முற்றிலும் சேதம் அடைந்தது. இதையடுத்து பள்ளத்தின் ஜல்லிகற்கள் பரப்பி மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவற்றின் மீது தார் சாலை அமைக்காமல் மணல் பரப்பி ஜல்லிகற்கள் பரப்பியவாறு கிடந்தது. இதையடுத்து அந்த வழியாக வந்த ஒரு லாரி சாலையின் பள்ளத்தில் சிக்கியது. இதனால் அந்த பகுதியில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று வாகனம் மூலம் அந்த லாரி மீட்கப்பட்டது. இதேபோல் பல முறை வாகனங்கள் விபத்தில் சிக்கி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் கருத்து

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்விவரம் பின்வருமாறு:-

கரூர் நரசிம்மபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த சின்னசாமி:-

ரெத்தினம் சாலை என்பது கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாகும். பழைய பி.எஸ்.என்.எல். அலுவலகம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மிக முக்கிய இடங்களுக்கு இச்சாலை வழியாக தான் சென்று வரவேண்டும். வேற வழியில்லை. தற்போது சாலை ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

தரமாக வேண்டும்

கரூர் காந்திகிராமம் இந்திரா நகரை சேர்ந்த கண்ணன்:- கரூர் ெரத்தினம் சாலை வழியாக 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் தினமும் சென்று வருகிறது. அந்த சாலையை குடியிருப்பு வாசிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் அச்சாலை சேறும், சகதியுமாக மாறி காட்சியளிக்கிறது. எனவே அந்த சாலையை தரமான தார்சாலையாக உருவாக்க வேண்டும்.

மாற்ற வேண்டும்

சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த வெங்கட்ராமன்:-

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வரும் ெரத்தினம் சாலை மிக முக்கியமான சாலைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட ெரத்தினம் சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் தரமான தார் சாலையாக மாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்