குடிநீர் வசதி செய்யப்படுமா?
குடிநீர் வசதி செய்யப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காவேரிப்பாக்கத்தில் வாசுகி நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி செய்து தரவில்லை. மக்கள் கேன் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் வாசுகி நகர் பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.