பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்

Update: 2022-08-15 17:37 GMT
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணையை அடைந்து அங்கிருந்து முக்கொம்பு வழியாக கல்லணையை வந்தடைகிறது. அந்த உபரிநீர் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கின் காரணமாக நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், சோதியக்குடி, சந்தைப்படுகை, வாடி உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கினர்.

பழுதடைந்த சாலைகள்

தற்போது வெள்ளம் வடிந்துள்ளதால் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் வீடு திரும்பி வருகின்றனர். வெள்ளத்தின் காரணமாக நாதல் படுகை, முதலை மேடு ஆகிய கிராமங்களில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. இதனால் கிராமமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே, மேற்கண்ட கிராம சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்






Tags:    

மேலும் செய்திகள்