கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-12-18 18:45 GMT

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கூடுதல் கட்டிடம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாக வசதிக்காக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 3 தளங்கள் அமைந்துள்ளன. இதில் கீழ் தளத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை மற்றும் சார் கருவூலம் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும் 2 தளங்களில் தோட்டக்கலை துறை, மீன்வளத்துறை, புள்ளியியல் துறை, சுற்றுலா துறை உள்பட பல துறை அலுவலகங்கள் உள்ளன.

கட்டிடம் பராமரிப்பின்றி கிடக்கிறது

இந்த கட்டிடத்தில் 3 தளங்களுக்கும் செல்ல லிப்ட் வசதி இருந்தும், தற்போது செயல்படாமல் உள்ளது. கலெக்டர் அலுவலகத்தின் முன்புறத்தில் வாகனம் நிறுத்தும் இடம் இருந்தும், அனைத்து வாகனங்களும் கட்டிட நுழைவு வாயிலில் நிறுத்தப்படுகிறது. வழி பாதையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.

எந்தவித பராமரிப்பு இன்றி பல இடங்கள் குப்பைகளாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக கழிவறைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த வளாகத்தில் ஒரு தனி கட்டிடம் எந்தவித பயன்பாடின்றி பல ஆண்டுகளாக உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசின் பலதுறை அலுவலகங்கள் நிரந்தர கட்டிட வசதி இன்றி வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் நிலையில் பயன்பாடின்றி ஒரு அரசு கட்டிடம் பழுதடைந்து வருகிறது.

எனவே பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தை குப்பைகளை அகற்றி தூய்மையாக பராமரிப்பதுடன், லிப்ட் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும். வாகன நிறுத்தும் இடத்தை பயன்படுத்துடன், பயன்பாடின்றி உள்ள கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்