வனவிலங்கு வார விழா: மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
வனவிலங்கு வார விழாவையொட்டி மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வாரம் வன உயிரின வார விழா கொண்டாடப்படும். இதன் ஒரு பகுதியாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வன உயிரின பாதுகாப்பு குறித்த ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் திருச்சி வனக்கோட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டன. இப்போட்டியில் 84 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட வன அதிகாரி கிரண் தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரி ஜி.ரமேஷ்குமார், திருச்சி உதவி வனப்பாதுகாவலர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். திருச்சி வனசரகர் கோபிநாத் நன்றி கூறினார். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.