வீட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர் அருகே காட்டு யானைகள் வீட்டை சேதப்படுத்தியது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மளிகை கடையின் இரும்பு ஷட்டரை உடைத்து சேதப்படுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பார்வுட் பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது. அங்கு சுரேந்திரன் என்பவரது வீட்டின் சுவரை உடைத்தது. இதனால் வீட்டின் ஒரு பகுதி சுவர் சேதமடைந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.