கள்ளத்தொடர்பை கண்டித்த தொழிலாளியை மண்வெட்டியால் வெட்டி கொன்ற மனைவி
மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கூலித்தொழிலாளி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
மேலூர்
மனைவியின் கள்ளத்தொடர்பை கண்டித்த கூலித்தொழிலாளி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கூலித்ெதாழிலாளி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 52). இவருடைய மனைவி பாண்டியம்மாள்(45). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர்.
திருப்பூரில் கூலித்தொழிலாளியாக ரவி வேலை பார்த்தார். தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் மேலூரில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன் அருக்கம்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றது.
அதற்கு வந்த ரவி அருக்கம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூங்கியுள்ளார். அப்போது, ரவி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இரவு நேரம் என்பதால் இது யாருக்கும் தெரியவில்லை. மறுநாள் காலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மனைவி கைது
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரவியின் மனைவி பாண்டியம்மாளுக்கும், மேலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், இதையறிந்த ரவி அவரது மனைவி பாண்டியம்மாளை கண்டித்ததாகவும் தெரிகிறது. அதனால் பாண்டியம்மாளும், அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து ரவியை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. இந்நிலையில் சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய மண்வெட்டியை கைப்பற்றிய போலீசார் பாண்டியம்மாளை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலனை மேலவளவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.