கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

களக்காடு அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-29 18:51 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மூங்கிலடி வடக்கு தெருவை சேர்ந்தவர் தங்கரத்தினம் (வயது 53). இவரது கணவர் முத்துகனிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். எனினும் கடந்த 2 மாதங்களுக்கு முன் அவர் இறந்தார். கணவர் இறந்ததால் தங்கரத்தினம் மன வேதனை அடைந்தார்.

இந்நிலையில் கடந்த 24-ந் தேதி தங்கரத்தினம் கணவர் சாப்பிட்டு வந்த மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தங்கரத்தினம் நேற்று இறந்தார். இவருக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கணவர் இறந்த 2 மாதத்தில் மனைவியும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்