மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

பெரியகுளம் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-03 19:30 GMT

பெரியகுளம் அருகே உள்ள தெய்வேந்திரபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கீதா (வயது 22). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக் கீதாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கீதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருடைய ஸ்கூட்டர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு கார்த்திக் ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து ஸ்கூட்டரில் பற்றிய தீயை அணைத்தனர். இதுகுறித்து கீதா கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்