டிரைவரை கொன்ற வழக்கில் மனைவி கைது

டிரைவரை கொன்ற வழக்கில் மனைவி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-06 19:04 GMT

தொட்டியம் அருகே தலைமலை அடிவாரம் ஒத்தரசு கிராமத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 43). லாரி டிரைவர். இவரது மனைவி மல்லிகா. புஷ்பராஜ் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மல்லிகாவிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினமும் மல்லிகாவிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மல்லிகா சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து புஷ்பராஜை வெட்டிக்கொலை செய்தார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை நேற்று கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்