டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவி கைது
பரமத்திவேலூரில் தினமும் மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்த டீ மாஸ்டரை சுத்தியலால் தாக்கிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்
டீ மாஸ்டர்
பரமத்திவேலூர் கந்தநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் வேலூர் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலா (36). விஜயகுமார் அடிக்கடி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று விஜயகுமார் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலா, கணவர் விஜயகுமாரை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மனைவி கைது
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரை சுத்தியலால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி கலாவை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.