கட்டிட தொழிலாளியை தாக்கிய மனைவி கைது

கட்டிட தொழிலாளியை தாக்கிய மனைவி கைது

Update: 2023-05-31 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் காகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 41), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லாவண்யா(26). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். சம்பவத்தன்று லாவண்யா, யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். இதுபற்றி கேட்ட ரமேசை, லாவண்யா திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்