மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Update: 2023-08-12 20:03 GMT

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆடிப்பட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்தநிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த 2 தினங்களாக மாலை வேளையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனாலும் மறுநாள் காலை மீண்டும் சுட்டெரிக்கும் வெயிலினால் மக்கள் வெளியில் வர அச்சப்படுகின்றனர். அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், மேட்டு தொட்டியங்குளம், செம்பட்டி, ஆத்திபட்டி, ராமசாமிபுரம், வாழ்வாங்கி, பந்தல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது.

ஆடிப்பட்டத்தில் விதை விதைத்த விவசாயிகள் தற்போது பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் உற்சாகத்துடன் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் அருகிலேயே தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருப்புக்கோட்டையில் தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து காணப்பட்டது.

இதனால் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

ஆலங்குளம்

ஆலங்குளம் பகுதியில் உள்ள கொங்கன்குளம், நரிக்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, கரிசல்குளம், சீவலப்பேரி, கண்மாய்பட்டி, வலையபட்டி மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, சிவலிங்காபுரம். அருணாசலபுரம், அப்பயநாயக்கர்பட்டி, ஏ.லட்சுமிபுரம். சுண்டங்குளம். புளியடிபட்டி கோபாலபுரம், எஸ்.எம்.எஸ்.நகர். கல்லமநாயக்கர்பட்டி, மாதாங்கோவில்பட்டி, உப்பு பட்டி, காக்கிவாடன்பட்டி, எதிர்கோட்டை, எட்டக்காபட்டி, இ.டி.ரெட்டியபட்டி, குண்டாயிருப்பு, முத்துச்சாமிபுரம், கண்டியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த பகுதியில் அடித்த சூறாவளி காற்று காரணமாக கொங்கன்குளம் கிராமத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தது.

காரியாபட்டி

மாந்தோப்பு, அச்சங்குளம், காரியாபட்டி, பிசிண்டி, வடகரை, கரிசல்குளம், தோப்பூர், பாம்பாட்டி, பாஞ்சார், வையம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென இடியுடன் நல்ல மழை பெய்தது.

விடிய, விடிய பெய்த மழையினால் மாந்தோப்பு பகுதியில் உள்ள கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்