தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை

Update: 2023-05-07 20:01 GMT

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக மஞ்சளாறில் 67 மி.மீ. பதிவானது.

தொடர் மழை

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடக்கத்தில் இருந்தும் மழை பெய்து வருகிறது.

இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இரவில் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் தற்போது குளிர் நிலவி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. பல இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. தஞ்சை மாவட்டத்தில் குருங்குளம், மஞ்சளாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை முதல் மழையின்றி வெயில் காணப்பட்டது.

மஞ்சளாறில் அதிகம்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

மஞ்சளாறு 67, குருங்குளம் 35, தஞ்சை 25, ஒரத்தநாடு 22, நெய்வாசல் தென்பாதி 16, வல்லம் 16, திருவையாறு 14, அய்யம்பேட்டை 14, அணைக்கரை 11, வெட்டிக்காடு 11, பட்டுக்கோட்டை 9, கும்பகோணம் 9, பூதலூர் 8, மதுக்கூர் 6, பாபநாசம் 6, திருக்காட்டுப்பள்ளி 4, அதிராம்பட்டினம் 4, கல்லணை 3, பேராவூரணி 3, ஈச்சன்விடுதி 2.

Tags:    

மேலும் செய்திகள்