புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது தொடர்ந்து சிறிது நேரம் பரவலாக பெய்தது. இதனால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் கந்தர்வகோட்டை உள்ளிட்ட இடங்களில் இடியுடன் மழை பெய்தது.