கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை

கீழ்வேளூர் பகுதியில் பரவலாக மழை

Update: 2023-01-05 18:45 GMT

கீழ்வேளூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று காலை கீழ்வேளூர், கூத்தூர், குருக்கத்தி, நீலப்பாடி, செருநல்லூர், காக்கழனி ஆழியூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 

Tags:    

மேலும் செய்திகள்