அணை பகுதிகளில் பரவலாக மழை

குமரியில் மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிற்றார்-1 பகுதியில் 33.6 மில்லி மீட்டர் பதிவானது.

Update: 2023-09-24 18:45 GMT

நாகர்கோவில், 

குமரியில் மாவட்டத்தில் அணை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சிற்றார்-1 பகுதியில் 33.6 மில்லி மீட்டர் பதிவானது.

பரவலாக மழை

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பொய்த்த நிலையில், தற்போது மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் சிற்றார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றார் 1-ல் 33.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதேபோல பூதப்பாண்டி- 1.4, களியல்-26.2, பேச்சிப்பாறை-23.2, பெருஞ்சாணி-7, புத்தன்அணை- 8.2, சுருளகோடு- 6.4, திற்பரப்பு- 25.8 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

அணை நிலவரம்

அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 1,190 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 580 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 628 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இதேபோல சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 9 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 18 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளுக்கு தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டு இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

--------

Tags:    

மேலும் செய்திகள்