2-வது நாளாக பரவலாக மழை

திருமருகல் பகுதிகளில் 2-வது நாளாக பரவலாக மழை

Update: 2023-04-25 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திட்டச்சேரி, அண்ணாமண்டபம், குருவாடி, ஏனங்குடி, போலகம், அம்பல், திருப்புகலூர், கட்டுமாவடி, வவ்வாலடி, ஆலத்தூர், குத்தாலம், மருங்கூர், எரவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் அதிகாலையில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த நிலையில் 2-வது நாளாக நேற்றும் அதிகாலையில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. வெயிலின் தாக்கத்தால் வெளியே வராமல் இருந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்