மாவட்டம் முழுவதும் பரவலாக மழை
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம்,
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக அடித்தது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்த மழையினால் தாழ்வான சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது.
சத்திரப்பட்டி, தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர், நல்லமங்கலம், புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக சாலைகள் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வடபத்திர சயனர் கோவில், ஆண்டாள் கோவில் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும் ஆத்துக்கடை தெரு, ராஜாஜி ரோடு போன்ற பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.