பிரதமர் மோடி ஏன் தமிழகத்திற்கு வரவில்லை? - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம்
மழை பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.
தூத்துக்குடி,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டார். இதனிடையே தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்பது தொடர்பாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
"மழை பாதிப்புகளை நேரில் வந்து பார்வையிட பிரதமர் வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் உள்ளது. ஆனால், பிரதமரை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு நேரம், காலம், அவகாசம், சூழல், சர்வதேச நிகழ்வுகள், பயணங்கள், நாடாளுமன்றம் என பல உள்ளன."
இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.