எம்மதமும் சம்மதம் என சொல்லும் மு.க.ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை? - சீமான் காட்டம்
இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை? என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
எம்மதமும் சம்மதம் என சொல்லும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டாலின், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக சீமான் மேலும் கூறியதாவது:-அதுக்கும் போகாதீங்க... இதுக்கும் போகாதீங்க... அப்படி செய்தால் இதுக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திடீர்னு தேர்தல் வரும்போது "நானும் இந்துதான், எங்கள் கட்சியில் 90 விழுக்காடு இந்துதான்" என சொல்வது நானா? நீங்களா? எதுக்கு அப்ப சொல்றீங்க? 90 விழுக்காடு உங்க கட்சியில் இந்துதானே, அவர்களின் பண்டிகைக்கு அவர்களின் வழிபாட்டுக்கு வாழ்த்து சொல்லிட்டு போங்க.
இதே விநாயகர் சதுர்த்தி... அடுத்த வாரம் தேர்தல்னா... நீங்கள் வாழ்த்து சொல்வீர்களா மாட்டீர்களா? எம்மதமும் சம்மதம்னு சொல்றீங்க... ஆனால் இந்து மதம் மட்டும் ஏன் உங்களுக்கு ஏற்புடையதல்ல? இவ்வாறு சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்