மதுரை அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு -வீசி சென்றது யார்? போலீசார் விசாரணை

மதுரை அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு கிடந்தது. அதை வீசி சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-05 20:06 GMT


மதுரை அரசு ஆஸ்பத்திரி கழிவுநீர் தொட்டியில் பெண் சிசு கிடந்தது. அதை வீசி சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி

தென் மாவட்டத்தில் மிக முக்கிய ஆஸ்பத்திரியாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாகவும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோல், மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு தனி வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கும் தென் மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

வீசி சென்றது யார்?

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு வார்டு அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளிபகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ஆஸ்பத்திரியின் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் சிசுவை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்