மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை-நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

ஆலங்குளத்தில் பள்ளிக்கூட மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-06-21 20:18 GMT

ஆலங்குளத்தில் பள்ளிக்கூட மாணவியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

பாலியல் பலாத்காரம்

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் மகன் பிரவீன்குமார் (வயது 23). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். அப்போது 10-ம் வகுப்பு படித்த ஒரு மாணவியுடன் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி அந்த மாணவியை ஒரு வீட்டுக்கு அழைத்துச்சென்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.

20 ஆண்டு சிறை

இந்த வழக்கு நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அன்புசெல்வி வழக்கை விசாரித்து, பிரவீன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெப ஜீவராஜா ஆஜர் ஆனார்.

Tags:    

மேலும் செய்திகள்