நிதி யாருக்கு வேணும்... நீதி எங்கே...? தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மகனை இழந்த தாய் கண்ணீர் விட்டு கதறல்...!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் மகன் இறந்த இடத்தை பார்த்து தாய் ஒருவர் கண்ணீர்விட்டு கதறி அழுது நிகழ்வு அனைவரையும் கலங்க வைத்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தின்போது, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதன் அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த மே மாதம் தமிழக அரசிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக பெண் ஒருவர் மனு அளிக்கவந்தார். அப்போது கடந்த 2018-ம் ஆணடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் மகன் இறந்த இடத்தை பார்த்து அவர் கண்ணீர்விட்டு கதறி அழுதார். இந்த நிகழ்வு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்களை கண் கலங்க வைத்தது.
மேலும், அருகில் இருந்த பெண் ஒருவர், எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது என்று பாருங்கள், முடிவுவந்து விட்டது இன்றும் கைது பண்ணவில்லை. நிதி கொடுக்கிறதில் தப்பில்லை, நீதி எங்கே... நிதியாருக்கு வேணும் என்று கூறினார்.