தூத்துக்குடியில் தலையில் அடிபட்டு இறந்த முதியவர் யார்? என போலீஸ் விசாரணை
தூத்துக்குடியில் தலையில் அடிபட்டு இறந்த முதியவர் யார்? என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே ரோட்டோரத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் தலையில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தவர் என்று கூறப்படுகிறது. மேலும் அவரை யாரோ மர்ம ஆசாமி கல்லால் தாக்கி கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போன்று இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.