அரசு பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

திருத்துறைப்பூண்டி அருகே அரசு பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Update: 2023-10-13 18:45 GMT

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- உடலில் உருவாகும் வெண்புள்ளிகள் நோயல்ல தோல் நிற மாற்றம். வெண்புள்ளிகள் ஒருவரால் மற்றவருக்கு பரவாது என்றும் இது தொற்று நோய் இல்லை என்று குறிப்பிட்டார். மேலும் வெண்புள்ளிகள் பற்றிய அறிவியல் உண்மைகளை மாணவர்கள் தெரிந்து கொண்டால் அது குறித்த கருத்துக்களை சமூகத்தில் இருந்து அகற்றலாம் என்றார். மேலும் வெண்புள்ளிகள் தோன்ற பாக்டீரியாவோ, வைரசோ காரணமில்லை. உடலில் வெள்ளை அணுக்களால் ஏற்படும் தவறான செயல் என்று குறிப்பிட்டார். வெண்புள்ளிகள் உள்ள மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பதோ, பாரபட்சமாக நடத்துவதோ கூடாது. அப்படி நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றார். அதை தொடர்ந்து வெண்புள்ளி குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை பட்டதாரி ஆசிரியர் இளங்கோவன் வாசிக்க அனைத்து மாணவ, மாணவிகளும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்