அறுவடைக்கு தயாரான கரும்பில் வெள்ளை புழு தாக்குதலால் பாதிப்பு
வாணாபுரம் பகுதியில் அறுவடைக்கு தயாரான கரும்பு பயிர்களில் வெள்ளை புழு தாக்குதலால் ேநாய் தாக்குதலுக்குள்ளாகி காய்ந்து வருவதால் அவற்றை வெட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்

கரும்பு சாகுபடி
வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. வாணாபுரம், மழுவம்பட்டு, அகரம் பள்ளிப்பட்டு, சதாகுப்பம், கொட்டையூர், தென்கரும்பலூர், சின்னக்கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, நவம்பட்டு, அள்ளிக்கொண்டாபட்டு, தலையாம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டு அதனை விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
அந்த வகையில் இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள கரும்புகள் நன்கு விளைந்து வருகின்றன. இவற்றில் 8 முதல் ஒன்பது மாத பயிர்கள் அறுவடைக்கு தயாராகின்றன.
ஆனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் உள்ள கரும்பு பயிர்கள் அனைத்தும் காய்ந்து வருகிறது. குறிப்பாக தலையாம்பள்ளம், நவம்பட்டு, சின்னக்கல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி வாணாபுரம், மழுவம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளைப் புழுதாக்குதலால் கரும்பு பயிர்கள் முழுவதும் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
ஆனால் வேளாண்மை அதிகாரிகள் இவற்றை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வெட்டுவதற்கு...
தொடர்ந்து கரும்பு பயிர்கள் சேதம் அடைந்து வருவதால் அதனை ஆலை நிர்வாகம் அறுவடை செய்வதற்கு அனுமதி வழங்குவது மட்டுமல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்படும் கரும்புகளை விரைவாக வெட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.