ஓட்டலில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

தேனியில் ஓட்டலில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-12-02 18:45 GMT

சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). இவர் தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர், ஓட்டலில் கிரைண்டர் முன்பு நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அவருடைய மகன் திருப்பதிராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்