மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேர் உடல் கரை ஒதுங்கியது

மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 பேர் உடல்கள் கரை ஒதுங்கியது.

Update: 2022-06-01 13:07 GMT

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலாதலமான மாமல்லபுரத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். இதில் ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரத்தை சேர்ந்த தோட்டாபவன் கல்யாண் (வயது 24), திருக்கழுக்குன்றம் அடுத்த கடம்பாடி கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான ரமேஷ் (19). இருவரும் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்து கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்டு மாயம் ஆனார்கள்.

மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் தீயணைப்பு துறையினர், மீனவர் பகுதியை சேர்ந்த நீச்சல் படை வீரர்கள் கொண்ட குழுவினர் தனி படகில் கடலுக்கு சென்று தேடினர்.

இந்த நிலையில் அவர்களது உடல்கள் மாமல்லபுரத்தில் இருந்து வடக்கு பக்க கடற்கரை பகுதியான பட்டிபுலம் என்ற இடத்துக்கு அடித்து செல்லப்பட்டு நேற்று கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்து மாமல்லபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்