காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோதுவீடு புகுந்து பணம், செல்போன் திருட்டு

தேனி அருகே காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது வீடு புகுந்து பணம், செல்போனை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-06-11 18:45 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி வடக்கு ஜெகநாதபுரம் குருசாமி தெருவை சேர்ந்தவர் ஆண்டவர் (வயது 55). நேற்று முன்தினம் இரவு படுக்கையறைக்கு வெளியே வராண்டா பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தார். காற்றுக்காக வீட்டின் ஒரு கதவை திறந்து வைத்து தூங்கினார். நள்ளிரவில் வீட்டின் படுக்கை அறையில் இருந்து சத்தம் வந்ததால் அவர் எழுந்து சென்று பார்த்தார்.

அப்போது அங்கிருந்து மர்ம நபர் ஒருவர் தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த ஆண்டவர் 'திருடன்... திருடன்...' என்று சத்தமிட்டார். பின்னர் அவர் அறைக்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்