சிவகிரி அருகே தங்கையின் ஊருக்கு சென்றபோதுடிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மின்வாரிய ஊழியரை மின்சாரம் தாக்கியது

சிவகிரி அருகே தங்கையின் ஊருக்கு சென்றபோது டிரான்ஸ்பார்மரில் ஏறிய மின்வாரிய ஊழியரை மின்சாரம் தாக்கி, தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

Update: 2023-04-14 22:06 GMT

சிவகிரி

சிவகிரி அருகே தங்கையின் ஊருக்கு சென்றபோது டிரான்ஸ்பார்மரில் ஏறிய மின்வாரிய ஊழியரை மின்சாரம் தாக்கி, தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மின்வாரிய ஊழியர்

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). இவர் திருப்பூர் காங்கேயம் நால்ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை பார்த்து வந்தார்.

இவரின் மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் வேலுச்சாமிக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் 3 மாதமாக வீட்டிலேயே இருந்து வந்தார்.

டிரான்ஸ்பார்மரில் ஏறினார்

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள அஞ்சூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொட்டம்பாளையத்தில் வேலுச்சாமியின் தங்கை கண்ணம்மாள் வீடு உள்ளது. அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் வேலுச்சாமி சிவகிரிக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மரில் வேலை பார்க்கும் ஞாபகத்தில் திடீரென ஏறினார்.

டிரான்ஸ்பார்மரின் மேல் பகுதிக்கு சென்ற வேலுச்சாமி மேலே செல்லும் கம்பியை பிடித்துவிட்டார். இதனால் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வேலுச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து மேலும் வழக்குப்பதிவு செய்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்