வாழைக்காய் வெட்டும்போது தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

வாழைக்காய் வெட்டும்போது தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தாா்.

Update: 2023-09-05 01:16 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள புதுகுய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் ஒவ்வொரு தோட்டமாக சென்று வாழைக்காய் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் அவர் நேற்று பவானிசாகர் அருகே அக்கரை தத்தப்பள்ளியில் உள்ள ஒரு தோட்டத்தில் வாழைக்காய் வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு சரவணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்