போடி அருகே ஓடும் அரசு பஸ்சில் சக்கரங்கள் கழன்றதால் பரபரப்பு

போடி அருகே ஓடும் அரசு பஸ்சில் சக்கரங்கள் கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-05-31 21:00 GMT

போடியில் இருந்து சின்னமனூர் நோக்கி நேற்று முன்தினம் மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. போடியை அடுத்துள்ள தர்மத்துப்பட்டி பகுதியில் அந்த பஸ் வந்தபோது, பஸ்சின் பின்பக்கம் வலதுபுற 2 சக்கரங்கள் திடீரென்று கழன்று ஓடியது. இதனால் பஸ் நிலைதடுமாறியது. பஸ்சில் வந்த பயணிகள் அலறினர். அப்போது டிரைவர் பஸ்சை சாதுரியமாக ஓட்டி, சாலையோரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பின்னர் வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து பஸ்சில் பழுதுநீக்குதல் மற்றும் சக்கரங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. ஓடும் பஸ்சில் சக்கரங்கள் கழன்று ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்