நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து வேலூரில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

Update: 2023-06-26 18:23 GMT

நாடாளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு குறித்து வேலூரில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார்.

கொடியேற்று விழா

வேலூரில் இன்று நடந்த தே.மு.தி.க. கட்சி கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு தேர்தல் நடைபெறும் 6 மாதத்துக்கு முன்பு தெரிவிக்கப்படும். இந்த முறை தேர்தலில் யார் போட்டியிடுவார்கள், எந்த தொகுதி என்று அதிகாரபூர்வமாக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார்.

வேலைவாய்ப்பு

அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை விவகாரத்தில் அமலாக்கத்துறை அவர்களின் கடமையை செய்துள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் போன பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

இதன் மூலம் அரசு மருத்துவமனையின் நிலைமை வெளிப்படுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணத்தில் பல புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் எங்கேயாவது ஒரு தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளதா?.

இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். வேலைவாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை. தற்போது சென்னை உள்பட பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது.

விலைவாசி, வரிகள் உயர்ந்துள்ளது. மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படுவது தவறான முன்னுதாரணம். இதன் மூலம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்துடைப்பு நாடகம்

500 மதுக்கடைகள் மூடியதாக அரசு கூறுகிறது. இந்த கடைகள் போதிய அளவு விற்பனை ஆகாத கடைகளே. இது கண்துடைப்பு நாடகம். நீட் தேர்வு தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தை வைத்து அரசியல் செய்தனர்.

மதுக்கடையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி விவகாரத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

எல்லாமே அரசியல் தான் இங்கு நடக்கிறது. கோவை பெண் டிரைவர் விவகாரத்திலும் அரசியல் தான் நடந்துள்ளது.

இவர் தான் அடுத்த முதல்-அமைச்சர் என்று யார், யாரையோ கூறுகின்றனர். அந்த பதவிக்கு மரியாதை உள்ளது. காலம் தான் அதை தீர்மானிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் கே.புருஷோத்தமன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்