காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் கதி என்ன?

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் கதி என்ன? என்பதை அறிய அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-07-30 19:50 GMT

கும்பகோணம் அருகே காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் கதி என்ன? என்பதை அறிய அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பாலிடெக்னிக் மாணவர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேல அம்மாசத்திரம் சோழன் நகர் கீழவீதியை சேர்ந்தவர் ஆனந்தராமகிருஷ்ணன். இவருடைய மகன் ஈஷா பான்ஸ்லே (வயது17). பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருவிடைமருதூர் காவிரி ஆற்றின் பூச படித்துறை அருகே குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ஈஷாபான்ஸ்லே ஆழமான பகுதிக்கு சென்றபோது திடீரென ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டார். அவர் நீரில் மூழ்கி மாயமானதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர்.

தேடும் பணி தீவிரம்

இதுகுறித்து தகவல் அறிந்த திருவிடைமருதூர் தீயணைப்புத்துறை வீரர்கள் 11 பேர் நிலைய சிறப்பு அலுவலர் வின்சென்ட் தலைமையில் அங்கு விரைந்து சென்று ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

அங்கு தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதையடுத்து அங்கு தண்ணீரை குறைக்க அறிவுறுத்தப்பட்டது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவரின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் நேற்று அந்த மாணவன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கதி என்ன?

மாணவரின் கதி என்ன? என்பதை அறிய அவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்